கணினி மயமாக்கப்பட்ட மின் தடை நீக்கம் மையம் திறப்பு

Jun 30, 2019 07:22 AM 146

சிவகங்கையில் கணினி மயமாக்கப்பட்ட மின் தடை நீக்கம் மையத்தை தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.


சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மானம் அலுவலகத்தில் கணினி மயமாக்கப்பட்ட மின் தடை மையம் துவக்க விழா நடைபெற்றது. ஆட்சி தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு மின் தடை நீக்கும் மையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், தமிழ்நாடு மின் பகிர்மான கழக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted