சன்னி லியோனுடன் தீபாவளி கொண்டாட அறிய வாய்ப்பு

Jun 28, 2019 05:20 PM 723

இன்றைய தலைமுறை இளைஞர்களை கவர்ந்தவர் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன். இவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு கூடும் கூட்டமே சாட்சி. இந்நிலையில் சன்னி லியோனை சந்திக்கும் ஓர் அறிய வாய்ப்பை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

வரும் தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகை சன்னி லியோன், “ரம்மிவித்சன்னி” என்ற விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் ஜெயித்தால் அவர் கையொப்பமிட்ட பரிசுகளும், மிக உயர்ந்த பரிசாக அவரையே சந்திக்கும் வாய்ப்பும் உண்டு என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுகள் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக பணம் கட்டி விளையாடும் சூதாட்டத்திற்கு தனிப்பட்ட மக்கள் கூட்டமே உள்ளது. நாம் விளையாட்டை விளையாடினாலும், மற்றவர்களை விளையாட வைத்தாலும் பணம் சம்பாதிக்கலாம் என்பதால் நாளுக்கு நாள் இதற்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் இந்த தீபாவளியை சன்னி லியோனுடன் சேர்ந்து கொண்டாட தயாராகுங்கள்...!

Comment

Successfully posted