இடுக்கி அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு

Aug 03, 2018 03:02 PM 881

இரவு பெய்த மழையால் கேரளாவில் உள்ள இடுக்கி அணை வேகமாக நிரம்பி கொள்ளவை அடையும் நிலையில் உள்ளது. இதன் முழு உயரம், 2,403 அடியாகும். தற்போது 2,395 அடியை இந்த அணை எட்டி உள்ளது.  இதனால் தற்போது அங்கு ஆரஞ்சு அலெர்ட் எனப்படும், பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு பின் அங்கு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்கள் வீடுகளை காலி செய்யும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் இரண்டு வாரங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted