பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளையொட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

Sep 15, 2021 05:50 PM 1068

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளையொட்டி, அவரின் திருவுருப் படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே பேரறிஞர் அண்ணா திருவுருப் படத்திற்கு, அஇஅதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருப்படத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கட்சியின் மூத்த நீர்வாகிகள், அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ். மணியன், கே.பி.முனுசாமி, சேவூர் ராமச்சந்திரன், பாண்டியராஜன் மாவட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

Comment

Successfully posted