காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று சுற்றுப்பயணம்

Sep 25, 2021 07:05 AM 2273

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறுவதற்காக, கழக நிர்வாகிகளுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்தநிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

Comment

Successfully posted