17 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விருப்ப மனு

Mar 14, 2019 07:03 AM 91

அதிமுக சார்பில் 17 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றனர்.

காலை 10 மணி தொடங்கிய விருப்ப மனு வினியோகம் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக விண்ணப்பிக்க ஏராளமானோர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். இந்த நிலையில் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து இன்றே சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. திருவாரூர் தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு விட்டதால், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Comment

Successfully posted