சாத்தூர் தம்பதிக்கு அரசு வேலை வழங்க ஆணை பிறப்பிப்பு

Mar 14, 2019 10:12 AM 75

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், கணவன் மனைவிக்கு அரசு வேலை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, கணவர் மற்றும் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. கணவர் மற்றும் மனைவி இருவரின் கல்வி தகுதிக்கு ஏற்ற வகையில் வேலை வழங்கபடும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கணவருக்கு விருதுநகர் மருத்துவமனையில் ஓட்டுநர் பணியும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு விருதுநகர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கும் ஆணை வழங்கபட்டுள்ளது.

Comment

Successfully posted