நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு

Feb 20, 2020 08:44 AM 1292

பாலியல் புகாரில் சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய கர்நாடகா மாநிலம் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில், பெண் சீடர்கள் இருவர் மாயமானது தொடர்பாக நித்தியானந்தா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. நித்தியானந்தாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் இந்தியாவில் இருந்து தப்பிவிட்டார். இதற்கிடையே, கர்நாடகா மாநிலம் பிடதி ஆசிரமத்தில், சீடர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு, நித்தியானந்தா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்த நிலையில், நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comment

Successfully posted