பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ :சமூகவலைதளங்களில் இருந்து நீக்க உத்தரவு

Mar 15, 2019 01:36 PM 79

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்களை இணையதளங்களில் இருந்து உடனடியாக நீக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர், அடையாளங்களை நீக்கி அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிபிஐக்கு பரிந்துரைத்த கடிதத்தில் பெண்ணின் அடையாளங்களை நீக்கி புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Related items

Comment

Successfully posted