உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைய ராகுல் காந்திக்கு தடை...

Aug 11, 2018 12:04 PM 517

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் தெலங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அவர்  உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், மாணவர்களுடன் கலந்துரையாட ராகுல் காந்திக்கு அனுமதி வழங்க   உஸ்மானியா பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. .  பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted