ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரசாரம்

May 16, 2019 07:24 PM 102

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவக்குறிச்சி, புதூர் பாண்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் ஆராத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமி, நீண்ட நாள் கோரிக்கையான தேவேந்திரகுல வேலாளர் சமுதாயத்தை பட்டியல் பிரிவில் இருந்து விலக்கி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் உறுதி அளித்தார்.

Comment

Successfully posted