குறைதீர்க்கும் முகாம் மூலம் கடந்த 2 மாதங்களில் 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு: முதல்வர்

Nov 09, 2019 03:19 PM 98

முதலமைச்சர் மக்கள் குறைதீர் முகாமின் மூலம் இரண்டு மாதங்களுக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் கொங்கணாபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 5 ஆயிரத்து 723 பயனாளிகளுக்கு 25 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், 18 கோடியே 89 லட்ச ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 43 பணிகளை திறந்து வைத்தார். மேலும் 112 கோடியே 36 லட்ச ரூபாய் மதிப்பிலான 116 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Comment

Successfully posted