ரெம்டெசிவிர் மருந்து வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்

May 05, 2021 10:42 AM 177

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக, பொதுமக்கள் நீண்ட வரிசையில் விடிய விடிய காத்துக் கிடக்கின்றனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக, நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர்.

வெளி மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் ஏராளமானோர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க வரிசையில் நிற்கின்றனர்.

இன்று மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கின்றனர். கூடுதல் கவுன்ட்டர்கள் அமைத்து மருந்து விநியோகத்தை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comment

Successfully posted