மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு

Sep 21, 2019 06:37 PM 103

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் 11ந் தேதி, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர். இருநாட்டின் தலைவர்களின் வருகையால் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைவர்கள் தங்கும் விடுதி, சுற்றிபார்க்கும் இடங்கள் என பல்வேறு இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலாளருடன், காவல் துறை இயக்குனர் திரிபாதி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உட்பட அரசு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

Comment

Successfully posted