ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து

Oct 17, 2018 01:35 AM 688

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டிகள் கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்தன. இதில் 15 தங்கம், 24 வெள்ளி, 34 வெண்கலம் உள்பட 72 பதக்கங்களுடன் இந்தியா 9-ஆவது இடத்தைப் பெற்றது.

இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சீனா, தென்கொரியா, ஈரான் உள்ளிட்டவை முதல் மூன்று இடங்களைப் பிடித்தது,

கடந்த 2014 ஆசிய பாரா போட்டியில் இந்தியா 3 தங்கம், 14 வெள்ளி, 1 வெண்கலத்துடன் வெறும் 33 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted