இன்று விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Sep 12, 2019 06:16 AM 381

சிறு, குறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

மத்திய பட்ஜெட் தாக்கலின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகள் மற்றும் இரண்டரை ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, உருவாக்கப்பட்டுள்ள பிரதான் மந்திரி கிஷான் மான் - தன் யோஜனா என்ற விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை, பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயதுடைய சிறு குறு விவசாயிகள் இணைய முடியும். சேரும் வயதைப் பொறுத்து 55 ரூபாய் தொடங்கி 200 ரூபாய் வரை விவசாயிகள் செலுத்த வேண்டும். அதே அளவு தொகையை மத்திய அரசும் செலுத்தும். விவசாயிகள் 60 வயதை அடையும் போது, மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.

Comment

Successfully posted