கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

Jun 15, 2019 04:47 PM 111

மழை நீரை சேமிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

சமீப காலங்களாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மழை நீரை சேமிக்க வேண்டும் என பிரதமர் மோடி கிராமப்புற பஞ்சாயத்து தலைவர்களை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி மழை காலம் விரைவில் துவங்க உள்ள நிலையில், மழை நீர் அதிகளவில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், மழை நீரை சேமிக்க பொதுமக்கள் அனைவரும் முயற்சிகளையும், ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கிராம பஞ்சாயத்தை கூட்டி இந்த கடிதம் குறித்து பொதுமக்களுக்கு தண்ணீர் சிக்கனம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மழை துளிகளையும் சேமிக்க பொதுமக்களை பஞ்சாயத்து தலைவர்கள் ஊக்குவிப்பீர்கள் என நம்புவதாக கடித்தத்தின் மூலம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் கொண்ட இந்த கடிதம் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பஞ்சாயத்து தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted