கடந்த 5 ஆண்டுகளில் தான் பணியாற்றிய விதம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?: பிரதமர் மோடி

Apr 19, 2019 08:49 AM 150

கடந்த 5 ஆண்டுகளில் தான் பணியாற்றிய விதம் உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா? என்று பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலம் சிக்கோடியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், பிரதமர் மோடி கலந்து கெண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கூட்டணிக்கு நாட்டு நலனைவிட வாக்கு வங்கியே முக்கியம் என்று விமர்சனம் செய்தார். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆட்சி காலத்தில் 3 விதமான வளர்ச்சிகள் மட்டுமே நிகழ்ந்தது என்றும், பணவீக்கம், இடைத்தரகர்கள் மற்றும் சில குடும்பங்கள் வளர்ச்சி கண்டதாக கூறினார்.

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு வாக்கு வங்கி மட்டும்தான் பிரச்சனை என்றும், மக்களின் நலன் மற்றும் நாட்டு நலன் குறித்து அவர்களுக்கு கவலையில்லை என்றார். கடந்த 5 ஆண்டுகளில் தான் பணியாற்றியவிதம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா? என்று பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்.

Comment

Successfully posted