மம்தாவின் கோபத்தால் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளது: பிரதமர் மோடி

May 16, 2019 07:02 AM 232

மம்தாவின் கோபத்தால் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் இறுதிகட்ட பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் பிஸ்ராத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், கொல்கத்தாவில் மேற்கு வங்க அரசு வன்முறையை கட்டவிழ்த்துள்ளதாக குற்றம் சாட்டினார். 2 நாட்களில் பழிவாங்குவேன் என கூறிய மம்தா பானர்ஜி அதனை செயல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மத்தியில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறிய அவர், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியில் கோபத்தால் பாஜகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

Comment

Successfully posted