வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

Nov 18, 2019 04:04 PM 215

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், இன்று துவங்கியது. நாட்டின் உயரிய அவையாக கருதப்படும் மாநிலங்களவையின் 250-வது கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வரலாற்று சிறப்பு மிக்க 250-வது மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார்.

மாநிலங்களவையின் 250வது கூட்டத்தில் உரையாற்றுவதை பெருமையாக கருதுவதாக கூறிய பிரதமர் மோடி, நாட்டின் முன்னேற்றத்தில் மாநிலங்களவை முக்கிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்தார்.

பெருமைமிக்க இந்த சபையில், முக்கிய சட்டங்கள் நிறைவேறியுள்ளதை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, நாட்டின் பன்முகத்தன்மையை மாநிலங்களவை பிரதிபலிப்பதாக கூறினார்.

Comment

Successfully posted