நாட்டு மக்களுக்காக இன்று ''மன் கி பாத்'' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

Jun 28, 2020 10:02 AM 899

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக இன்று ''மன் கி பாத்'' நிகழ்ச்சியில் வானொலியில் உரையாற்றுகிறார்.

66வது முறையாக நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றும் பிரதமர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, வானொலியில் உரையாற்றும் முக்கிய அம்சங்கள் குறித்து யோசனை தர பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். முன்னதாக மே 31ம் தேதி வானொலியில் உரையாற்றிய பிரதமர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்கள் பின்பற்றும் வழிமுறைகள் குறித்து உரையாற்றினார். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில், பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றுகிறார்.

Comment

Successfully posted