புதிய கல்விக்கொள்கை குறித்து இன்று உரையாற்றும் பிரதமர் மோடி!

Aug 07, 2020 07:47 AM 755

புதிய கல்விக் கொள்கை மூலம் உயர்கல்வியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.

புதிய கல்விக் கொள்கை முறைக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 29ம் தேதி ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இந்த புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பான கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. அதில் காணொலி மூலம் உரையாற்ற இருக்கும் பிரதமர் மோடி, உயர்கல்வி சீர்த்திருத்தங்கள் குறித்து விளக்கம் அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comment

Successfully posted