5-ம் கட்ட ஊரடங்கு குறித்து “மனதின் குரல்” நிகழ்சியில் பிரதமர் மோடி தெரிவிப்பார் என தகவல்!!

May 28, 2020 09:05 AM 2104

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் வரும் 31ஆம் தேதி வரை 4ஆம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளதால், ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவில் 70 சதவீத பாதிப்பு இந்த நகரங்களில் காணப்படுவதால், கட்டுப்பாடுகள் தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. பிற நகரங்களில் தளர்வுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை வரும் 31 ஆம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted