பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

Jan 20, 2020 07:22 AM 186

பிரதமர் மோடி, பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடுகிறார். டெல்லியில் இன்று நடைபெற உள்ள இந்த நிகழ்வில், தமிழகத்தைச் சேர்ந்த 66 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், இன்று பிரதமர் மோடி அவர்களைச் சந்திக்கிறார். பிரதமர் மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்க, 2 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 50 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

டெல்லியில் உள்ள தால்கடோரா அரங்கத்தில் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், முதன்முறையாக 50 மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடியுடன் கலந்துரையாட, தமிழகத்திலிருந்து 66 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை பள்ளிகளில் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளை மாநில பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

Comment

Successfully posted