15 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்!

Jun 17, 2020 01:33 PM 490

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட 15 மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தடுப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து 21 மாநில முதலமைச்சர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் நேற்று காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இரண்டாம் நாளான இன்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

Comment

Successfully posted