பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

May 27, 2019 10:40 AM 86

பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்ல உள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார். முன்னதாக காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அவர் வழிபாடு செய்கிறார்.

வாரணாசியின் முக்கிய பகுதிகள், குடியிருப்புகள் பகுதிகளில் ஊர்வலமாக சென்று மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கிறார். பின்னர், பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார். மோடியை வரவேற்பதற்காக பாஜக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், நமது நாட்டின் வளர்ச்சிக்கு நேருவின் பங்களிப்பை இந்த வேளையில் நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted