மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பிரதமர் மோடி வாக்களிப்பு

Apr 23, 2019 10:03 AM 344

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தனர்.

நாடு முழுவதும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மூன்றாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மக்களுடன் வரிசையில் நின்று பிரதமர் மோடி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

வாக்களிக்க வந்த பிரதமர் மோடி பாஜக தலைவர் அமித்ஷாவின் பேத்திக்கு இனிப்பு வழங்கி, கொஞ்சி மகிழ்ந்தார். வாக்களித்த பின்னர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் சாலையில் ஊர்வலமாக நடந்து சென்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக காந்திநகரில் வசித்து வரும் தனது தாயை, பிரதமர் மோடி சந்தித்து ஆசி பெற்றார்.

Comment

Successfully posted