தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Aug 25, 2019 08:39 PM 397

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை ஒகுஹராவை வீழ்த்தி முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சிந்து, ஜப்பான் வீராங்கனை ஒகுஹராவை 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

இந்நிலையில், "உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பி.வி.சிந்துவிற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பி.வி.சிந்துவின், வெற்றியின் மூலம் இந்தியா பெருமை அடைந்துள்ளதாகவும், இந்த வெற்றி எதிர்கால இளைஞர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும்" எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted