பாக். ஆக்ரமிப்பு காஷ்மீரில் அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு விற்பதாக புகார்!!!

Apr 02, 2020 02:59 PM 2226

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாகிஸ்தானில் இதுவரை கொரோனா வைரசுக்கு 31 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டாயிரத்துக்கு 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியான மிர்பூரில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஏழைகளுக்காக வழங்கப்படும் கோதுமை உள்ளிட்ட பொருட்களை, அதிகாரிகள் சில்லறை விற்பனை கடைகளில் விற்றுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களை உரிய முறையில் விநியோகிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted