பாகிஸ்தான் செல்ல இலங்கை வீரர்கள் மறுப்பு

Sep 10, 2019 08:32 AM 148

பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கை வீரர்கள் 10 பேர் மறுப்பு தெரிவித்து, தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

கடந்த 2009-ல் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதன் பின் ஜிம்பாப்வே, மேற்கு இந்திய தீவுகளை தவிர்த்து மற்ற நாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இதனிடையே இலங்கை அணி வரும் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதிவரை மூன்று ஒருநாள், மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தநிலையில், ஒரு நாள் அணி கேப்டன் கருணாரத்னே, டி-20 அணி கேப்டன் மலிங்கா, மாத்யூஸ் உள்ளிட்ட 10 வீரர்கள், பாகிஸ்தானில் போதிய பாதுகாப்பு இருக்காது என்பதால், அங்கு செல்ல மறுத்து தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

Comment

Successfully posted