பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம்

Sep 11, 2019 01:48 PM 106

பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பண வீக்கம் ஏற்பட்டுள்ளதால், அடிப்படை தேவை பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த கோடைக் காலத்தில் கடும் வெப்பத்தையும், அனல் காற்றையும் பாகிஸ்தான் எதிர்க் கொண்டது. இதனால் அங்கு விளை பொருட்கள் உற்பத்தி குறைந்த நிலையில், இம்ரான் கான் அரசின் தவறான மேலாண்மை தொழில் மற்றும் உற்பத்தித் துறைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனால் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பாலின் விலை 140 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 113 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 91 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. அதிபர் மாளிகைக்கு மின்கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில் பாகிஸ்தான் அரசு தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்து இருப்பதால், நடுத்தர, ஏழை எளிய மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

Comment

Successfully posted