இந்தியா-பாக். போட்டி விளம்பரத்திற்காக அபிநந்தனை கிண்டல் செய்த பாகிஸ்தான் ஊடகம்...

Jun 11, 2019 05:28 PM 2503

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலககோப்பை லீக் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதற்கு விளம்பரம் ஒன்றை பாகிஸ்தான் தனியார் ஊடகம் தயார் செய்துள்ளது. அதில் இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை அந்த ஊடகம் கிண்டல் செய்துள்ளது. அந்த விளம்பரத்தில், அபிநந்தன் போல் தோற்றமையுடைய ஒருவரிடம் கேள்விகள் கேட்கப்படுகிறது. அதில், "நீங்கள் டாஸ் ஜெயித்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்?", "உங்களுடைய playing XI என்ன?" என்ற கேள்விகள் கேட்கப்பட்டது. இறுதியில் "டீ எப்படி இருந்தது?" என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அபிநந்தன் "நன்றாக உள்ளது" என பதில் அளிக்க " அப்படியென்றால் கப்பை எங்களிடம் கொடுங்கள் இனி அது எங்களுடையது" என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கு இந்திய ரசிகர்கள் மிகவும் cool-ஆக,"டீ cup தானே அதை நீங்கள் வைத்து கொள்ளுங்கள்... world cup-யை நாங்கள் எடுத்து கொள்ளுகிறோம்" என்று பதில் அளித்துள்ளனர்.


 

Comment

Successfully posted