பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் சிறையில் அடைப்பு

Aug 01, 2018 06:02 PM 408

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரீப் ஆகியோர் கடந்த 14ஆம் தேதி லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா (Adiala) சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், நவாஸ் ஷெரீப்பிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிறையிலேயே அவரக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள  மருத்துவமனையில்  அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை மீண்டும் சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. முதலில் சிறைக்கு செல்ல விரும்பாத நவாஸ் ஷெரிப், அவரது மகள் மற்றும் மருமகனின் ஆலோசனைக்கு பிறகு மீண்டும் சிறைக்கு செல்ல சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மருத்துவமனையில் இருந்து நவாஸ் ஷெரிப் அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Comment

Successfully posted