பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

Jul 25, 2019 08:49 AM 379

பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.

பழனி முருகன் கோயிலில் காணிக்கை உண்டியல்கள் நிரம்பியதையடுத்து உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ் கண்காணிப்பில் நடந்த காணிக்கை எண்ணும் பணியில் வங்கி ஊழியர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். உண்டியல் மூலம் 2 கோடியே 42 லட்சத்து 33 ஆயிரத்து 570 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. 957 கிராம் தங்கமும், 9 ஆயிரத்து 930 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

Comment

Successfully posted