புதிய 8 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி

Feb 15, 2020 11:37 AM 170

தமிழகத்துக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 8 மருத்துவக்கல்லூரிகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுவதுடன், கரூர் மருத்துவக்கல்லூரியை திறந்து வைக்கிறார்.  

தமிழகத்தில் புதிதாக 8 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்தது. இந்நிலையில் மார்ச் 1ம் தேதி ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி கிருஷ்ணகிரி, மார்ச் 5ம் தேதி நாமக்கல், திண்டுக்கல் பகுதிகளில் புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் அன்றையதினம் கரூரில் கட்டப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரியை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். மார்ச் 7ம் தேதி நாகப்பட்டினம், 8ம் தேதி திருவள்ளூர், 14ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted