ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பனை தொழிலாளர்கள்!

Jul 03, 2020 05:45 PM 319

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த பனை தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்களின் பிரதான தொழில் பனை தொழிலாகும். கொரோனா ஊரடங்கு காரணமாக, பனை நாரை வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த தொழிலில் இருக்கும் பனை தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே வாழ்வாதாரம் கருதி அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், 45 வயதுக்கு மேல் உள்ள பனை தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comment

Successfully posted