தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம்!

Mar 30, 2021 12:01 PM 441

தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த சாலவாக்கம் ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சாலவாக்கம் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருபவர் சதீஷ். இவர் தனது கிராம மக்களுடன் சேர்ந்து, உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்ததாக, தேர்தல் அலுவலருக்கு ஆதாரபூர்வமாக புகார் வந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலர், ஊராட்சி செயலர் தேர்தல் விதிமுறைகளை மீறியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

 

Comment

Successfully posted