முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிடித்த விழா நவராத்திரி - தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்

Oct 11, 2018 12:57 PM 566

அரசியலில் ஆன்மீக அடையாளமாக திகழ்ந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிடித்த விழா நவராத்திரி என தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அமைச்சர் பாண்டியராஜன் இதில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசியலில் ஆன்மீகத்திற்கு அடையாளமாக திகழ்ந்ததாக புகழாரம் சூட்டினார்.

அவர் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடக் கூடியவர் எனவும் அவர் கூறினார். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, விழுப்புரம் நாடளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted