இயற்கை மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி விவசாயம்

Jan 24, 2020 07:09 AM 241

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி விவசாயத்தில் ஈடுபட்டு வரும் முதுகலை பட்டதாரி இளைஞர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள எதப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் முதுகலை  பட்டதாரி இளைஞரான சீனிவாசன் என்பவர், இயற்கை முறை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். தனக்கு சொந்தமான வயலில் தோட்டக்கலை துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, புது முயற்சியாக இயற்கை முறையில் ரெட் லேடி வகை பப்பாளியை பயிரிட்டு, சொட்டுநீர் பாசன முறையில் விவசாயம் செய்து வருகிறார். ஒரு முறை அறுவடை செய்தால் சுமார் 35 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும், இவை சுமார் மூன்று ஆண்டுகள் வரை சாகுபடிக்கு பலனளிக்கும் எனவும் தெரிவிக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாரம்பரிய நெல் பயிர்களையும் விவசாயம் செய்து அசத்தி வருகிறார். இதனால் இழப்பீடு ஏற்பட வாய்ப்பு குறைவு என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted