கொரோனா தொற்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பிய பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர்!

Jul 09, 2020 09:35 PM 542

கொரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு, ஆரத்தி எடுத்து குடும்பத்தினர் வரவேற்றனர். ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வந்த பரமக்குடி அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரது மகன் மற்றும் உதவியாளர் முனியசாமி ஆகிய மூவருக்கும் கடந்த வாரம் கொரோனா தொற்று பாதித்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சையில் பூரண குணமடைந்த சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் சொந்த ஊரான முதுகுளத்தூரை அடுத்த பேரையூருக்கு திரும்பினார். அவரை குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Comment

Successfully posted