புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளை சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்

May 16, 2019 01:07 PM 94

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 2019 - 2020ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் மொத்தம் 932 இடங்களுக்கு 4 ஆயிரத்து 367 விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளன.இந்தநிலையில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் விளையாட்டுப் போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்கான கலந்தாய்வும் நடைபெற்றன. முன்னதாக ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கலந்தாய்வு நிறைவடைந்தது.

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவிகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு 24ம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted