பிரான்சில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி

Jul 26, 2019 08:00 AM 251

பிரான்சில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பநிலை நிலவுகிறது. அதிகபட்சமாக 42.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதால், மக்கள் நீர் நிலைகள் மற்றும் செயற்கை நீறுற்றுகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். ஈஃபிள் கோபுரம் அருகே உள்ள செயற்கை நீறுற்றுகளில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளித்து வெப்பத்தை தணித்துக்கொண்டனர்.

அயல் நாடுகளில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் வெப்பநிலை அதிகரித்ததால் ஏமாற்றமடைந்துள்ளனர். புவி வெப்பமடைந்து வருவதன் அடையாளமாகவே இந்த வெப்பநிலையைப் பார்ப்பதாக சுற்றுச்சூழலியர் ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் இரண்டாவது வெப்ப அலை ஐரோப்பாவைத் தாக்கியதால் பிரெஞ்சு அரசாங்கம் பல கடுமையான வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. பாரிஸைத் தவிர, ஐரோப்பா முழுவதும் பல நகரங்கள் இந்த வாரம் மிக உயர்ந்த வெப்பநிலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted