பா.ஜனதா கட்சியின் நாடாளுமன்ற ஆட்சிமன்ற குழு பட்டியல் வெளியீடு

Jun 12, 2019 05:14 PM 83

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற ஆட்சிமன்ற குழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களைவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில், பாஜகவின் நாடாளுமன்ற ஆட்சி மன்ற குழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷாவே தொடர்ந்து செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மக்களவை தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும் மக்களவை துணை தலைவராக ராஜ்நாத் சிங்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் கொறடாவாக பிரலாத் ஜோஷி மற்றும் பொருளாளராக கோபால் ஷெட்டி செயல்படுவார்கள் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted