அனைவரும் அவசியம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பார்த்திபன் ட்வீட்!

Apr 07, 2021 12:57 PM 1775

தேர்தலுக்கு முந்தைய நாள் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்திய பார்த்திபன், தேர்தலன்று காணாமல் போனது ஏனோ? பலருக்கும் தோன்றிய சந்தேகத்திற்கு அவரின் ட்வீட் பதில் கூறியுள்ளது.

image

”ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு! வணக்கமும் நன்றியும்!” என்று கூறிய பார்த்திபன்
இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் கண் காது முகம் வீங்கி ஒவ்வாமை ஏற்பட்டதாகவும், தனக்கு முன்னரே இருந்த அலர்ஜியே இதற்கு காரணம் என்றும் , சிலருக்கு இது போல ஏற்படும் என்றாலும் கொரோனா தடுப்பூசி மிக அவசியம் எனவே அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

இதன் காரணமாகவே தன்னால் வாக்களிக்க இயலவில்லை என்பதை ”வருத்தமும்,இயலாமையும்” என சொல்லி இருந்தார் பார்த்திபன் என்பது கவனிக்கத்தக்கது

Comment

Successfully posted