விவசாய நிலத்தில் உடைக்கபட்ட ஏ.டி.எம் இயந்திரத்தின் பாகங்கள்

Jul 09, 2019 03:27 PM 241

ஆந்திராவில் விவசாய நிலத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தின் பாகங்கள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தின் பாகங்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் பாகங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆயுத ரிசர்வ் காவலர் குடியிருப்பு அருகே உள்ள ஏ.டி.எம் மையத்தின் இயந்திர பாகங்கள் என தெரியவந்துள்ளது. வங்கி அதிகாரிகளிடம் விசாரித்ததில் ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டு 8 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted