நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்துங்கள் : பிரதமர் மோடி

Feb 13, 2020 06:22 AM 160

வரிவிதிப்புக்கு உட்பட்ட அனைவரும், நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 8 மாதங்களில், வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு முடிவுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக கூறினார்.

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டது, முத்தலாக் நடைமுறை தடை செய்யப்பட்டது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் திருத்தப்பட்டது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுக்கு பல்வேறு சவால்களும் உள்ளதாக கூறிய பிரதமர் மோடி,  நாட்டின் வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு முந்தைய அரசுகள் தயங்கிய நிலையில், அதனை மாற்றிக் காட்டியது மத்திய பாஜக அரசுதான் என்று கூறினார். வரி விதிப்புக்கு உள்பட்ட அனைவரும், நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

Comment

Successfully posted