பழ. நெடுமாறனுக்கு 2018ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது

Jan 15, 2019 07:11 AM 199

பழ. நெடுமாறனுக்கு 2018ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழக அரசு, ஒவ்வொரு வருடமும் விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் திருவள்ளுவர் விருது எம்.ஜி.அன்வர் பாட்சாவுக்கும், தந்தை பெரியார் விருது சி. பொன்னையனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது டாக்டர் சி.ராமகுருவுக்கும் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பெருந்தலைவர் காமராஜர் விருது பழ.நெடுமாறனுக்கும், மகாகவி பாரதியார் விருதுக்கு பாரதி சுகுமாரன் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விருதுகள், வரும் 21ஆம் தேதி மாலை, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். விழாவின்போது, முதிர்ந்த தமிழறிஞர்கள் 92 பேருக்கும், மாத உதவி தொகையும் முதலமைச்சர் வழங்க உள்ளார்.

Comment

Successfully posted

Super User

நெடுமாறன் அவர்களை கெளரவித்ததர்கு நன்றி