பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தமுடியாது- மத்திய அரசு

Mar 15, 2019 10:05 AM 303

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்காதவரை பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தமுடியாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்து வருகிறது. ஆனால் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தையை நடத்த முடியும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தீவிரவாதம் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து இரட்டை வேஷம் போடுவதாக குற்றம் சாட்டினார்.அமைதி பேச்சுவார்த்தையில் நாட்டம் இருந்தால், மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைத்து, அதை இம்ரான்கான் நிரூபிக்கட்டும் என்று தெரிவித்துள்ள அவர், தீவிரவாதம் இல்லாத அமைதியான சூழல் நிலவினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted