மத்திய பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்பு

Jan 25, 2022 05:00 PM 2123

மத்திய அரசின் பட்ஜெட்டில் வணிகர்கள், தெற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும்  பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஆகியோர்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன..? என்பதை பார்க்கலாம்.

கொரோனா பெருந்தொற்று பேரிடரால், தொடர் இழப்பை சந்தித்த சிறு தொழில் சார்ந்த வணிகர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், வரி குறைப்பு அறிவிக்க வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை நிர்ணயத்தை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

((அருண்குமார் - தமிழ்நாடு வியாபாரிகளின் சங்கப்பேரவை))

((கொரோனா பெருந்தொற்றால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
சிறு தொழில் நிறுவனங்கள் மீதான வரியை குறைக்க கோரிக்கை
மூலப்பொருட்கள் மீதான விலைய குறைக்க வேண்டும் - வணிகர்கள்
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டுவர வேண்டும்
மத்திய அரசுக்கு தமிழ்நாடு வியாபாரிகளின் சங்கப்பேரவை வலியுறுத்தல்))

image

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள புதிய வேலை வாய்ப்பு அறிவிப்புகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்ப்பதாக தெற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

((சூர்ய பிரகாஷம் - தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம்))

(("பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்"
"ரயில்வே துறையில் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்"
"கொரோனா காலத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கு நிவாரணம் தேவை"
"தமிழ்நாட்டில் கூடுதல் ரயில்வே பாதைகளை உருவாக்க வேண்டும்"
மத்திய அரசுக்கு தெற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்))

image

பட்ஜெட்டில், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான அறிவிப்புகளும், கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கைகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறுமா? என்று பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

((சேதுராமன், பொருளாதார நிபுணர்))

((வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது

பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

நிறுவனங்களின் கடன் சுமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தள்ளுபடி ஆகுமா?-முதலீட்டாளர்கள்))


Comment

Successfully posted