பவானிசாகர் அணைப் பூங்காவில் குவிந்த பொதுமக்கள்

Apr 15, 2019 08:04 AM 76

தமிழ் புத்தாண்டையொட்டி பவானிசாகர் அணைப் பூங்காவிற்கு ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா வந்திருந்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பூங்காவில் பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு படகு சவாரி என அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சிறுவர் சிறுமியர் பூங்காவில் உள்ள நீரில் குளித்து விடுமுறையை உற்சாகமாக கொண்டாடினர்.

Related items

Comment

Successfully posted